துப்பாக்கி சூட்டு காயத்துடன் குடும்பஸ்தரொருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட ஈரளக்குளம் அரச வனப் பகுதியிலிருந்து துப்பாக்கி சூட்டு காயத்துடன் குடும்பஸ்தரொருவரின் சடலம் வியாழக்கிழமை (04) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

முறக்கொட்டான்சேனையைச் சேர்ந்த கணேசமூர்த்தி கருணாகரன் (வயது 25) என்பவரே உயிரிழந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் ஈரளக்குளம் ஆவட்டியாவெளி அரச வனப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டு செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக ஒபப்டைக்கப்பட்டுள்ளது.

சடலத்தில் கட்டுத்துப்பாக்கியின் ரவை காயம் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர் . இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]