துப்பாக்கியுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமான துப்பாக்கி ஒன்றுடன் நபர் ஒருவர் பொல்கம்பல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட குறித்த துப்பாக்கியுடன் அதற்கான ரவைகள் 4 உம் குறித்த நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுகம, கலபடவத்த பகுதியை சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை மதுகம நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் மதுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]