துப்பாக்கியுடன் ஒருவர் கைது

களுத்துறை, நாகொடை பிரதேசத்தில், வெளிநாட்டில் தாயரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர கைதுசெய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹொரனை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள் சந்தேக நபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]