துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மேல்மாகாண கவுன்சிலர் அமல் சில்வா காயம்

மேல்மாகாணசபை கவுன்சிலர் அமல் சில்வா மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரத்மலானை பகுதியில் வைத்து இன்று இரவு அமல் சில்வா மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இந்த துப்பாக்கி பிரயோகம் காரணமாக அமல் சில்வா படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.