துப்பாக்கிச்சூட்டில் தாய் பலி மகன் படுகாயம்

துப்பாக்கிச்சூட்டில் தாய் பலி மகன் படுகாயம்

நிட்டம்புவ, ஹத்;வடுன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர். படுகாயமடைந்துள்ளார்.

55 வயதுடைய தாய் ஒருவரே உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவரால் இந்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தாய் மற்றும் மகன் மீது இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த நிலையில், இருவரும் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், சிகிச்சைப் பலனின்றி தாய் உயிரிழந்த நிலையில், மகன் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]