துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

கதிர்காமம் நகரில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்.

நேற்று இரவு 10.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலியாகியுள்ளார். அதனையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தை தொடர்ந்து நகர் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சிலர்பொலிஸார் மீது கற்களை கொண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

எனினும், நிலைமை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.