துப்பாக்கிசூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் கைது

நிட்டம்புவ, அத்தனகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு உதவியாக இருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தனகல்ல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதானவரே கைதுசெய்யப்பட்டதுடன், அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்தனகல்ல பிரதேசத்தில் கடந்த 21ஆம் திகதி இரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்திருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]