துன்பங்கள் நீங்கி செல்வசெழிப்புடன் வாழ எந்த ராசிக்காரர்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா??

ராசிகளை பொருத்து துன்பத்தினை போக்குவதற்கு அனைவரும் பரிகாரங்களையும் பூஜைகளையும் மேற்கொள்வர்.

வெற்றிலை பரிகாரத்தினை செய்வதன் மூலம் அனைத்து ராசிகாரர்களும் துன்பங்களை தவிர்க்கலாம்.

மேஷம்
வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய்கிழமை முருகனை வழிபட்டு சாப்பிட துன்பங்கள் நீங்கும்.

ரிஷபம்

அமைதியானவர்கள் வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய்கிழமை ராகுவை வழிப்பட்டு சாப்பிட்டால் துன்பங்கள் விலகும்.

மிதுனம்

இசை ஆர்வம் கொண்டவர்கள் வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன்கிழமை இஷ்டதெய்வத்தினை வணங்கி சாப்பிட்டால் துன்பம் தீரும்.

கடகம்

உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள் வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிகிழமை காளி தெய்வத்தை வணங்கி சாப்பிட்டால் துன்பம் விலகும்.

சிம்மம்
மிகப்பெரிய லட்சியவாதியாக இருப்பார்கள் வியாழக்கிழமையன்று வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து இஷ்டதெய்வத்தினை வணங்கி சாப்பிட்டால் கஷ்டம் விலகும்.

கன்னி

வசீகரத்த தன்மை கொண்டவர்கள் வெற்றிலையில் வியாழக்கிழமையன்று மிளகு வைத்து இஷ்டதெய்வத்தினை வணங்கி சாப்பிட்டால் துன்பம் தீரும்.

துலாம்

நேர்மையுடவர்கள் வெற்றிலையில் கிராம்பு வைத்து வெள்ளிகிழமை இஷ்ட தெய்வத்தினை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.

விருச்சிகம்

உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டார்கள் வெற்றிலையில் பேரிச்சம்பழம் வைத்து செவ்வாய்கிழமை இஷ்ட தெய்வத்தினை வழிபட்டு சாப்பிட்டால் துயரம் தீரும்.

தனுசு

சுதந்திரத்தை விரும்புபவர்கள் வெற்றிலையில் கல்கண்டு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தினை வணங்கி சாப்பிட்டால் கவலை தீரும்.

மகரம்

யாரையும் நம்ப மாட்டார்கள் அச்சு வெல்லத்தினை சனிக்கிழமையன்று வெற்றிலையில் வைத்து காளி தெய்வத்தினை வணங்கி சாப்பிட்டால் துன்பம் விலகும்.

கும்பம்

நம்பிக்கையுடன் திகழ்வார்கள். வெற்றிலையில் நெய் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தினை வணங்கி சாப்பிட்டால் கவலை தீரும்.

மீனம்

அன்பை அள்ளி வழங்குபவராக இருப்பார்கள். ஞாயிற்றுகிழமை இஷ்ட தெய்வத்தினை வழிபட்டு வெற்றிலையில் சர்க்கரை வைத்து சாப்பிட்டால் நோய் தீரும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]