துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞர் – தம்பதியினர் கைது!

வீடொன்றில் இருந்து துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்ட சம்வம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிதீஷ்குமார்-சசி தம்பதியினர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த 7 மாதங்களாக ஈரோடு மாவட்டத்தில் தங்கி அங்குள்ள சாய ஆலையில் கூலி வேலை செய்து வந்துள்ளனர்.

இவர்கள் பீகாருக்கு இரயிலில் செல்லும் போது பீகாரைச் சேர்ந்த நவீன்குமார் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின் குறித்த இளைஞனும் இவர்கள் வீட்டில் தங்கி,ஈரோட்டில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தான் நிதீஷ்குமார்-சசி தம்பதியினர் திடீரென நவீன்குமாரின் பெற்றோருக்கு போன் செய்து 2 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதனால் உடனடியாக பீகார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் பெற்றோர். அதன் பின் நவீன் குமாரை தேடி பொலிசார் தமிழகத்திற்கு விரைந்துள்ளனர்.

அதன் பின் தமிழ்நாடு பொலிசார் உதவியுடன், நிதீஷ்குமார்-சசி தம்பதியினர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அங்கு நவீன்குமார் துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். நிதீஷ்குமார்-சசி தம்பதியினர் ஆக்சா பிளேடு மூலம் தலை, கை, கால்,இடுப்பு பகுதி என தனிதனியாக துண்டுதுண்டாக வெட்டியுள்ளனர்.

வீன்குமார் உடலை கைப்பற்றிய பொலிசார் உடற்கூறு ஆய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து நிதீஷ்குமார்-சசி தம்பதியினரை கைது செய்த பொலிசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]