துங்கமயாய பிரதேசத்தில் இரண்டு பேர் வெட்டிக் கொலை

வெவணகல, துங்கமயாய பிரதேசத்தில் இன்று அதிகாலை 04.00 மணியளவில் இரண்டு பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

பயிர் நிலம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த குடிசையில் உறங்கிக் கொண்டிருந்தவர்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அதே பிரதேசத்தைச் சேர்ந்த 39 மற்றும் 54 வயதுடைய இரண்டு பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

செவணகல பொலிஸாருக்கு கிடைத்துள்ள தகவலுக்கமைய மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]