தீ விபத்தில் மனைவி பலி; கணவன் கைது

வீடொன்று தீப்பற்றியதில், 24 வயதான யுவதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று பகல் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எரிகாயங்களுக்கு உள்ளான, குறித்த யுவதியின் மகள் மற்றும் கணவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விசாரணைகளுக்கு அமைய, மரணித்த பெண்ணின் கணவரே வீட்டுக்கு தீ வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதனையடுத்து, வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் அவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.