தீர்க்கமான முடிவு எட்டப்படாவிட்டால் பதவியை இராஜினாமா செய்யபோவதாக தொண்டமான் தெரிவிப்பு

எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய போவதாக இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அறிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளார்.

30ஆம் திகதிக்குள் தீர்வு கிடைக்காவிட்டால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி தீபாவளிக்கு பின்னர் மக்களுடன் மக்களாக போராட்டங்களை நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]