தீரன் படக்குழுவை பாராட்டிய ஷங்கர்

தீரன் படக்குழுவை பாராட்டிய ஷங்கர்

ஷங்கர்

கார்த்தி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியாகிய படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இப்படத்தை ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்திருந்த இப்படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இதனை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார்.

இந்தப்படத்தில் கார்த்தி ‘தீரன் திருமாறன்’ எனும் நேர்மையான போலீஸ் டி.எஸ்.பி-யாக நடித்திருந்தார். இந்த படத்தின் கதைக்களமானது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையேயும், விமர்சன ரீதியாகவும் நல்வரவேற்பைப் பெற்றுள்ளது .

மேலும், காவல் துறை அதிகாரிகளும், திரையுலக பிரபலங்களும் பாராட்டி, புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், தீரன் படத்தை பார்த்த இயக்குனர் சங்கர், ‘அற்புதமான போலீஸ் படம். நகம் கடித்து, சீட்டின் நுனியில் உட்கார வைத்திருக்கிறார்கள். சிறந்த முயற்சி’ என்றும் நடிகர் கார்த்தியின் நடிப்பு, இயக்குனர் வினோதின் கதைக்களத்தை, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையையும், படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]