தீயில் கருகிய நிலையில் வயோதிபரின் சடலம் மீட்பு

பொகவந்தலாவ பெற்றோசோ டெவன் போல் தோட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தீயில் கருகிய நிலையில் குடும்பஸ்த்தரின் சடலம் ஒன்று மிட்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த குடியிருப்பு ஒன்றில் வசித்துவந்த சுப்ரமணியம் என்ற 70 வயது வயோதிபர் ஒருவரே தீயில் கருகிய நிலையில் சடலமாக மிட்கபட்டுள்ளார்.

குறித்த வயோதிபர் சுகயினம் முற்ற நிலையில் தமது வீட்டில் தனிமையாக இருந்து வந்ததாகவும் அந்த வயோதிபரை அவருடை பிள்ளைகள் கவனித்து கொள்ளபடுதில்லையெனவும் அயலவர்கள் தெரிவித்தனர்.

நேற்று செவ்வாய் கிழமை காலை 11மணி அளவில் வயோதிபரின் மருமகள் அவரை பார்வையிட சென்ற போதே குறித்த நபர் தீயில் கருகி உயிர்ழந்த நிலையில் காணப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு முலத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

என்றாலும் மகள் தந்தையை தீமூட்டி கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]