தீயால் ஹட்டன் குடியிருப்பொன்றில் கூரை சேதம்

ஹட்டன் நகர் சேக்குளர் பகுதியில் உள்ள குடியிருப்பொன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் குடியிருப்பின் கூரைப்பகுதி சேதமாகியதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர் .

ஹட்டன் டிப்போவுக்கு செல்லும் வீதியின் சேக்குளர் பகுதியிலே இன்று(19) மதியம் தீவிபத்து இடம்பெற்றுள்ளது.

அண்மைக்காலமாக மலையகத்தில் நிலவும் அதிக வெப்ப நிலை காணமாக வீட்டின் கூரைப்பகுதியில் தீபற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், தீ விபத்தினால் உயிராபத்து ஏற்படாத போதிலும் வீட்டின் கூரைப்பகுதி சேதமாகியுள்ளதுடன் அயலவர்களும் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.