தீப்பந்தத்தால் சிறுவர்கள் உட்பட 20இற்கு மேற்பட்ட இளைஞர்கள் படுகாயம்

மட்டக்களப்பு – உன்னிச்சை 7ஆம் கட்டைப்பகுதி ஆலயமொன்றின் உற்சவத்தின்போது தீப்பந்தம் சுழற்றியபோது தீப்பொறிகள் சிதறியடித்ததில் சுற்றி நின்ற சிறுவர்களும் இளைஞர்களுமாக சுமார் 20இற்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக ஆயித்தியமலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

7ஆம் கட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உற்சவம் சனிக்கிழமை 23.06.2018 ஆரம்பித்த சற்று நேரத்தில் இரவு 11.45 மணியளவில் இத்துயர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவ்வாயல நிர்வாகத்தினரும் ஆலயத்திற்குச் சென்றிருந்தோரும் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது உறவினர்களும் தெரிவித்தனர்.

திருவிழா வீதி உலா வந்து கொண்டிருந்தபோது அந்த ஊர்வலத்திற்கு முன்பாக ஒருவர் தீப்பந்து சுழற்றிக் கொண்டிருந்தார். அத்தீப்பந்தத்தில் இருந்து தீ நாக்குகள் சிதறி ஊர்வலத்துடன் பவனி வந்துகொண்டிருந்தவர்கள் மீது வீழ்ந்து தீப்பற்றிக் கொண்டுள்ளது.

தீப்பந்தத்தால் சிறுவர்கள் தீப்பந்தத்தால் சிறுவர்கள் தீப்பந்தத்தால் சிறுவர்கள் தீப்பந்தத்தால் சிறுவர்கள் தீப்பந்தத்தால் சிறுவர்கள்

இதனையடுத்து திருவிழா ஊர்வலத்தில் சென்றவர்கள் நாலா பக்கமும் சிதறி தறிகெட்டு ஓடியுள்ளனர்.இதனாலும் பலர் தடக்கி வீழ்ந்து காயங்களுக்குள்ளானார்கள்.
தீக்காயம்பற்றிக் கொண்டவர்கள் உடனடியாக கரடியனாறு பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சேர்ப்பிக்கப்பட்டார்கள்.

இவர்களில் படுகாயமடைந்த 9 பேர்மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]