தீபாவளி ஸ்வீட் இனிப்பு பெட்டிஸ் – நீங்களும் செய்து பாருங்கள்

தீபாவளி ஸ்வீட் இனிப்பு பெட்டிஸ் – நீங்களும் செய்து பாருங்கள்

தேவையான பொருட்கள்:

மைதா மாவு – 2கப்
பட்டர் – 100 மில்லி
சோடா உப்பு – ஒரு சிட்டிகை
சீனி – ஒருசிட்டிகை
உப்பு , தண்ணீர் தேவைக்கு
உள் அடக்கம் :
தேங்காய் பூ -3கப்
முந்திரி , பாதம், பிஸ்தா, கிஸ்மிஸ், தேவைக்கு
ஏல‌க்காய்த்தூள் – 1 சிட்டிகை
உப்பு – 1 சிட்டிகை
சீனி அல்லது கருப்பட்டி – தேவைக்கு

                                         செய்முறை:

உள் அடக்கம் :

தேங்காய் பூ, சீனி, முந்திரி, பாத‌ம், பிஸ்தா, ஏல‌க்காய்த்தூள் சேர்த்து க‌ல‌ந்து ஒரு பவுலில் வைக்கவும்.

பெட்டிஸ் செய்முறை:

மைதா மாவுடன் ,உப்பு, பட்டர், சீனி , சோடா உப்பு தண்ணீர் தேவைக்கு ஏற்ப சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் நன்றாக பிசைந்து கொள்ளவும்.

சிறு சிறு உருண்டைகளாக மாவினை உருட்டி வைக்கவும். ஓவ்வொரு உருண்டைகளையும் சப்பாத்தி கட்டையில் தேய்த்து மெல்லிய வட்டமாக தேய்கவும்

பிறகு பெட்டிஸ் செய்யும் அச்சில் வட்டமாக தேய்த்த மாவினை மேலே வைக்கவும். அதன் நடுவில் சிறு இனிப்பு அடக்கத்தினை வைத்து மூடவும்.

இது போல் எல்லா மாவினையும் இது போல் செய்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெனை விட்டு நன்றாக காய்ந்த பின்பு பொறித்து எடுத்தால் சுவையான இனிப்பு பெட்டிஸ் ரெடி.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]