தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்தளிக்க வரும் ‘பில்லா பாண்டி’

தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்தளிக்க வரும் ‘பில்லா பாண்டி’

K.C.பிரபாத் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பில்லா பாண்டி’. இப்படத்தில் R.K.சுரேஷ் தல ரசிகராக நடித்துள்ளார்.

இவருக்கு ஜோடியாக மேயாதமான் இந்துஜா மற்றும் சாந்தினி கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

அத்தோடு தம்பி ராமையா, சரவண சக்தி, மாரிமுத்து,அமுதவாணன், சங்கிலி முருகன், சௌந்தர்,மாஸ்டர் K.C.P தர்மேஷ், மாஸ்டர் K.C.P மிதுன் சக்ரவர்த்தி உட்பட பலர் நடிக்கின்றனர்.

மேலும் சூரி கெஸ்ட் ரோலிலும், சிறப்பு தோற்றத்தில் விதார்த்தும் நடித்துள்ளனர்.

ராஜ் சேதுபதி இயக்கத்தில், MMS மூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். ஜீவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு இளையவன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் தயாரிப்பாளரும், முக்கிய வேடத்தில் நடிப்பவருமான K.C.பிரபாத் ஒரு தல அஜித் ரசிகர் என்பதால் அனைத்தலப்பட்டி எனும் ஊரில் பில்லா பாண்டி படத்தின் கதை நடப்பதாக எடுக்கப்பட்டிருக்கிறது.

ஊரின் பெயரிலேயே ‘தல’ இருப்பதால், அந்த ஊரில் நடிகர் அஜித்திற்கு பல ரசிகர்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.

பில்லா பாண்டி படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் K.C.பிரபாத், இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் இப்படத்தில் நடிகர் அஜித்தின் புகழ் பாடும் ‘எங்க குல தங்கம்’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தீபாவளிக்கு ரசிகர்களுக்கு தீபாவளிக்கு ரசிகர்களுக்கு தீபாவளிக்கு ரசிகர்களுக்கு தீபாவளிக்கு ரசிகர்களுக்கு தீபாவளிக்கு ரசிகர்களுக்கு தீபாவளிக்கு ரசிகர்களுக்கு தீபாவளிக்கு ரசிகர்களுக்கு தீபாவளிக்கு ரசிகர்களுக்கு தீபாவளிக்கு ரசிகர்களுக்கு தீபாவளிக்கு ரசிகர்களுக்கு தீபாவளிக்கு ரசிகர்களுக்கு தீபாவளிக்கு ரசிகர்களுக்கு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]