தீபாவளிக்கு தல, தளபதி மோதுவதால் சாமி 2 படக்குழு எடுத்த அதிரடி முடிவு

இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் சாமி படத்தில் நடித்த விக்ரம், தற்போது அதே படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் சியான் விக்ரம் தவிர மற்ற நடிகர்கள் பெரும்பாலும் மாற்றப்பட்டுள்ளனர். கதாநாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க, வில்லனாக பாபி சிம்ஹா நடிக்கிறார். கதையும் இன்றைய சூழலுக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகை விக்ரம், அப்பா – மகன் என இரண்டு ரோலில் நடிக்கிறார். அப்பாவான ஆறுச்சாமியின் மகன் தான் கோட்டா சீனிவாசனின் மகன்களை சுழுக்கெடுக்கும் போலீஸ் விக்ரம்.

தற்போது படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. இதில், பாடல் காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளைய முடுக்கி விட்டுள்ளார் இயக்குனர் ஹரி. தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்கப்பட்ட இந்த படம் முன்கூட்டியே ஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது படக்குழு.

தீபாவளிக்கு அஜித், விஜய் படங்கள் வெளியாகவுள்ளதால் சாமி 2 படத்தை முன் கூட்டியே ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் என தெரிகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]