தீக் காயங்களுக்கு உள்ளான நிலையில் பெண்ணொருவர் உயிரிழப்பு

தீக் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

தேராவில், விசுவமடுவைச் சேர்ந்த 23 வயதான மயூரன் துளசி என்ற இளம் பெண்ணெ உயிரிழந்துள்ளார்.

தீக்காயமடைந்த நிலையில் துளசி தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவர் மேலதிக சிகிச்சைக்காகக் கடந்த 10ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிசிக்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நா.பிறேமகுமார் மேற்கொண்டார்.

கணவன் – மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக, கணவனால் துளசி கொல்லப்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த 5 ஆம் திகதி இந்தப் பெண்ணின் கணவரும், நண்பர் ஒருவரும் வீட்டில் மது அருந்தியுள்ளனர். இதன்போது ஏற்பட்ட முரண்பாடு மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவங்கள் தொடர்பில் கணவரின் நண்பர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]