தீக்குளித்த மனைவியை காப்பாற்ற சென்ற கணவன் தீயில் கருகி பரிதாப பலி

தேனியில் தீக்குளித்த மனைவியை காப்பாற்ற சென்ற கணவன் தீயில் கருகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் கணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அடுத்துள்ளது கோம்பை. இங்குள்ள திரு.வி.க. நகரைச் சேர்ந்தவர் பீமன். இவரது மகன் வெள்ளச்சாமி (50). இவருக்கு இராமாயம்மாள் (45) என்ற மனைவி இருந்தார்.

வெள்ளச்சாமிக்கு குடிப்பழக்கம் இருப்பதால் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த இராமாயம்மாளுடன் சண்டையிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படும்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டுக்கு குடித்துவிட்டு வந்தவெள்ளச்சாமி மீண்டும் இராமாயம்மாளுடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் மனவேதனை அடைந்த இராமாயம்மாள் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

மனைவி தீயில் எரிவதை பார்த்து அலறிய கணவர், அருகில் சென்று அவரைக் காப்பாற்ற முயன்றார். அப்போது வெள்ளச்சாமி மீதும் தீ பற்றிக் கொண்டது. இதில், தீயில் கருகி படுகாயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு மூன்று நாள்களாக சிகிச்சைப் பெற்று வந்த வெள்ளச்சாமி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவி இராமாயம்மாள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.இதுகுறித்த புகாரின்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தீக்குளித்த மனைவியை காப்பாற்ற சென்ற கணவன் தீயில் கருகி இறந்த சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]