திஸ்ஸமஹாராம – பெரலிஹெல பிரதேசத்தில் அகழ்வு பணிகளில் ஈடுபட்டோர்

திஸ்ஸமஹாராம – பெரலிஹெல வரலாற்று புகழ்மிக்க பிரதேசத்தில் அகழ்வு பணிகளில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறை விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் திஸ்ஸமஹாராம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.