திலும் அமுனுகமவிடம் 12 மணிநேர விசாரணை

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவிடம் 12 மணிநேர விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு விசாரணைகளுக்காக திலும் அமுனுகம நேற்று அழைக்கப்பட்டிருச்தார்.

கண்டி பிரதேசத்தில் அண்மையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்கு அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

விசாரணைகளின் பின்னர் திலும் அமுனுக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலேயே கண்டி வன்முறைச் சம்பவங்களின்போது எவருக்கும் பாதிப்பற்ற வகையில் நடந்துகொண்டேன். இதனை அனைத்து மக்களும் நன்கு அறிவார்கள்.

“இன்றைய விசாரணையில் எனது அலைபேசி பெறப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. விசாரணை செய்வது அவர்களது கடைமை எனவே அதற்கு எனது பூரண ஒத்துழைப்பினை வழங்கியிருந்தேன்’ என அவர் மேலும் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]