திலிகிவட்டை, கோராவெளி, குடும்பிமலை, பெரியவட்டுவான் உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் ஆர்பாட்டத்தில்

திலிகிவட்டை திலிகிவட்டை திலிகிவட்டை திலிகிவட்டை திலிகிவட்டை திலிகிவட்டைமட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேசத்துக்குட்பட்ட திகிலிவட்டை படகுப் பாதைப் சேவையை முற்றுமுழுதாக இலவசமாக வழங்குமாறு கோரி இன்று (11) புதன்கிழமை பிரதேச மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திகிலிவட்டை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் திகிலிவட்டை துறை அருகில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

திலிகிவட்டை, கோராவெளி, குடும்பிமலை, பெரியவட்டுவான் உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் தினமும் இந்த பாதை ஊடாகவே பயணம் செய்கின்றனர். பயணத்திற்காக ஓரு வழிப்பாதைக்கு நபரொருவருக்கு 10 ரூபாவும் சைக்கிள் மற்றும் வாகனங்களுக்கு வேறாகவும் கட்டணங்கள் அறவிடப்படுகின்றன. வெள்ளம் ஏற்படும் காலங்களில் மேலதிக கட்டணங்களும் அறவிடப்படுகின்றன.

குறித்த படகுப் பாதை கோறளைப் பற்றுப் பிரதேச சபையினால் சந்திவெளி புதுப்பிள்ளையார் ஆலய நிருவாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆலய நிருவாகம் குறித்த நடைமுறையை நிறுத்தி சேவையை முற்றுமுழுதாக இலவசமாக வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மாவட்டத்தில் ஏனைய பகுதிகளில் நடைபெறும் படகுப் பாதைப் பயணத்திற்கு கட்டணங்கள் அறவிடப்படடுவதில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.

நல்லாட்சி அரசாங்கம் 100 நாட்கள் வேலைத் திட்டம் என கூறி பதவிக்கு வந்தது அவர்கள் குறித்த பகுதியில் பாலம் அமைப்பதாக கூறினார்கள் ஆனால் இதுவரை எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. கடந்த அரசாங்கமும் எமக்கு பல வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றியது தற்போதுள்ள நல்லாட்சி என கூறிக்கொள்ளும் அரசாங்கமும் எமது மக்களை ஏமாற்றுகிறது. என கவலை வெளியிட்டனர்.

குறித்த இடத்திற்கு வருகைதந்த கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபை செயலாளர் சாலி முகமட் சிஹாப்டீனிடம் இஙகு கருத்து தெரிவிக்கையில் – திகிலிவட்டை ஆற்றைக் கடக்கும் படகுப் பாதை சேவையினை முற்றுமுழுதாக கட்டணமின்றிய சேவை வழங்கப்பட வேண்டும் என அழுத்தமாக கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

படகுச் சேவை குத்தகை அடிப்படையில் சந்திவெளி புதுப்பிள்ளையார் ஆலயத்துக்க வழங்கப்பட்டுள்ளது. குறித்த படகுக்கான திருத்தத்திற்காக இந்த வருடம் ரூபா 8 இலட்சமும் காத்திரிப்பு மண்டபம் ரூபா 3 இலட்சம் புதிய இயந்திர கொள்வனவுக்கா ரூபா 3 இலட்சத்து 40 ஆயிரம் பிரதேச சபையினால் இவ்வருடம் செலவு செய்யபட்டுள்ளது.

இந்த மக்களின் கோரிக்கைக்கு அமைய முற்றுமுழுதான இலவச சேவையை வழங்குவதற்கு ஆலயமும் பிரதேச சபையும் செய்துகொண்ட ஒப்பந்தம் ஒரு தடையாக இருக்கிறது. குறித்த கோரிக்கையை உள்ளுராட்சி திணைக்கள உயரதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தி அவர்களுடைய முடிவை ஒருவார காலத்திற்குள் அறிவிப்பேன் அதுவரை எதுவித தடங்கலும் வராது ஒத்துழைப்ப வழங்க வேண்டும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]