திலங்க சுமதிபால மீண்டும் போட்டி

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலில் தான் மீண்டும் போட்டியவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்;தல் எதிர்வரும் மே மாதம் 19ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அவர் கூறினார்.

தான் உள்ளிட்ட நிர்வாகத்தினர் பதவிக்கு வந்த காலப்பகுதியில் இலங்கையின் கிரிக்கெட்டுக்காக குறிப்பிடத்தக்க சேவையாற்ற முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவ்வாறான சேவையை எதிர்காலத்திலும் ஆற்றுவதற்கு தயாராகவுள்ளதாகவும் திலங்க சுமதிபால சுட்டிக்காட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]