திரையரங்குளில் பிரம்மாண்டமாக வெளிவரவுள்ள ‘UTurn’

பவன் குமார் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘UTurn’. த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் நாயகியாக சமந்தா நடித்துள்ளார்.

ஸ்ரீனிவாச சித்தரி மற்றும் ராம்பாபு பந்தரி இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஆதி, ராகுல் ரவின்திரன் மற்றும் பூமிகா சாவ்லா ஆகியோர் நடித்துள்ளனர்.

பூர்ண சந்திர தேஸ்வி இசையில் நிகேத் பூம்மிரெட்டி மிக அழகான நுட்பத்துடன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அத்தோடு, BR8 Creations V. Y. Combines Srinivasa Silver Screen வழங்கும் இப்படத்திற்கு சுரேஸ் ஆறுமுகம் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.

தமிழ், தெலுங்கு போன்ற இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது.

‘UTurn’ படத்தின் டிரைலர் அதிப்படியான ரசிகர்களால் மிகவும் பார்க்கப்பட்டுள்ளதோடு, டிரைலரில் காட்டப்பட்ட அதிரடி காட்சிகள் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது என்றே கூறலாம்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ள இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 13ஆம் திகதி பல திரையரங்குளில் பிரம்மாண்டமாக கண்களுக்கு விருந்தளிக்க காத்திருக்கின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]