திரைப்பட வாய்ப்பை கையில் எடுத்துள்ள விஜயலட்சுமி

திரைப்பட வாய்ப்பை கையில் எடுத்துள்ள விஜயலட்சுமி

தமிழில் வெங்கட் பிரபு இயக்கிய ‘சென்னை 28’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் விஜயலட்சுமி.

இதன் பின்னர் ஒரு சில தமிழ் படங்களிலும் அவர் நடித்திருந்த போதிலும், பெரிய அளவிலான வெற்றிகளை அப்படங்கள் பெறவில்லை.

பின்னர் பிக்பாஸ் இரண்டாவது சீசனின் பாதியில் வந்து போட்டியாளராக கலந்துகொண்ட அவர், பாதியிலேயே நிகழ்ச்சியிலிருந்தும் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் விஜயலட்சுமி வெளியில் வந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இயக்குனர் சிம்புதேவன் இயக்கவுள்ள புதிய படத்தில் தான் நடிக்கவுள்ளதாகவும் வெங்கட் பிரபு தயாரிப்பில் அப்படம் உருவாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]