முகப்பு Cinema திரைப்பட இயக்குநர் மணிரத்தினம் திடீர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி

திரைப்பட இயக்குநர் மணிரத்தினம் திடீர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி

திரைப்பட இயக்குநர் மணிரத்தினம் இன்று (வியாழக்கிழமை) திடீர் மாரடைப்பால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஆயுதஎழுத்து படத்தை இயக்கிய போதே மாரடைப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் காற்றுவெளியிடை படத்தின் போது மற்றொரு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

தன் திரையுலக பயணத்தில் ஒவ்வொரு நடிகருக்கும் ஒருமுறையாவது இவர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவை ஏற்படுத்தியவர் மணிரத்தினம்.

ரோஜா, நாயகன், தளபதி, கன்னத்தில் முத்தமிட்டால், பம்பாய், ஆயத எழுத்து, குரு, ராவணன், ஓ.கே.கண்மனி, காற்றுவெளியிடை போன்ற பல வெற்றி படங்களை இயக்கியவர் இவர். இவர் தனது படங்கள் மூலம் தமிழ் சினிமாவை இந்திய திரையுலகிற்கு மட்டுமின்றி உலக திரையரங்கிற்கே எடுத்து சென்றவர்.

இவரது மனைவி முன்னாள் கதாநாயகியும், தற்போதைய குணசித்திர நடிகையுமான சுஹாசினி ஹாசன் ஆவார்.

இவர் தற்போது சிம்புவை வைத்து செக்க சிவந்த வானம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com