முகப்பு News Local News திரு எம்.கே.ஸ்டாலினுடன் சந்திப்பு – ரணில்

திரு எம்.கே.ஸ்டாலினுடன் சந்திப்பு – ரணில்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழகம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் எம்.கே.ஸ்டாலினை சந்தித்துள்ளார்.
பிரதமரின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகனை தாம் சந்தித்து கலந்துரையாடியதாக அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் மேலதிக விபரங்கள் வெளியாக்கப்படவில்லை.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, திருப்பதிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தூதுக்குழுவாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழு ஒன்று, மு.கருணாநிதியை பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com