திருமண வரவேற்புக்கு வந்த மகளை தீயிட்டு கொளுத்திய தாய் !

திருமணமாகி ஒரு வாரம் கடந்த நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வீட்டுக்கு வந்த மகளை தாயே தீ வைத்து எரித்த சம்பவம் பாகிஸ்தானில் அரங்கேறியுள்ளது. முன்னதாக, ஜீனத் ரஃபீக் என்ற 18 வயது பெண், தன் பள்ளியில் படிக்கும் ஹஸன் கான் என்ற வாலிபரை வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில், ஜீனத்துக்கு, அவரது உறவினர்கள் மாப்பிள்ளை பார்த்த போது, அதை அவர் மறுத்ததற்கு ஹஸன் கான் தான் காரணம் என தெரிய வந்ததும், அவரது குடும்பம் முதல் உறவினர்கள் வரை மிகுந்த கோபத்துடன் இருந்துள்ளனர்.

இதனிடையே, வீட்டை விட்டு ஓடி வந்து திருமணம் செய்து கொண்ட தன் மகளை தொடர்பு கொண்ட ஜீனத் ரஃபீக்கின் தாயார் பெர்வீன் பீவி, “உன்னை மன்னித்து விட்டோம், உங்களுக்காக திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம் வந்துவிடு” எனக் கூறியுள்ளார்.

pakistan mother

ஆயினும், தாயின் இந்த வார்த்தைகள் சந்தேகத்துக்கு உரியதாக இருந்தாலும், அதை அரை மனதுடன் ஏற்றுக்கொண்ட ஜீனத், தனது சொந்த வீட்டிற்கு சென்றுள்ளார். அவ்வாறு வீட்டுக்கு சென்ற ஜீனத்தை அடித்து துன்புறுத்திய தாய் மற்றும் அவரது அண்ணன், கட்டிலில் அவரை கட்டி வைத்து விட்டு மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்துள்ளனர். இதன் காரணமாக அந்த இடத்திலேயே ஜீனத் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தக் கொலை தொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஜீனத்தின் தாயாருக்கு தற்போது மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.