திருமண உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகள்

திருமண உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகள்

ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் தான் பல ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைவதுண்டு.

இதில் முக்கியம் என்னவென்றால் இருவருக்கும் தனது ஜோடியின் ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் பற்றி அறிந்திருப்பது அவசியமாகும். பொதுவாகவே ஜோடிகள் ஆசைகளை பகிர்ந்து கொள்வது உண்டு.

திருமண பந்தத்தில் இணைந்துள்ள ஜோடிகள் எதிர்பார்ப்புகளில் எது நியாயமானது, எது நடைமுறைக்கு சாத்தியமானது என்பது பற்றிய தெளிவு வேண்டும்.

இருவருக்கும் பல பிரச்சனைகள் வருவதற்கான முக்கிய காரணமானது, துணைவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பது துணைவிக்கும், துணைவியின் எதிர்பார்ப்பு துணைவருக்கும் வெளிப்படையாக தெரியாமல் இருப்பதுவே ஆகும்.

திருமண வாழ்வில் பெரும் பிரச்சனைகள் உண்டுபண்ணும் காரணங்களாவது!!!

திருமண உறவுகளில்

தம்பதிக்குள் பிரச்சனையை உருவாக்கும் முக்கியமான காரணி, திருமணத்திற்கு முந்தைய நடத்தைகள்.

தெரிந்தோ, தெரியாமலோ செய்துவிட்ட ஒரு தவறால், மனதில் குற்ற உணர்வு இருந்து கொண்டேஇருக்கும். அது எப்போது தனது துணைக்கு தெரியவருமோ? என்ற உறுத்தல் வாழ்க்கையை பாதிக்கும்.

வேறு யாராவது குறுக்கிட்டு உண்மைகளை சொல்லி வாழ்க்கையை நாசமாக்கிவிடுவார்களோ? என்ற பய உணர்வு கூடஎழும்.

அதற்காக‘ மனம் விட்டு பேசுகிறேன்’ என்றுகடந்த கால விடயங்களை எல்லாம் சொல்லி பாவ மன்னிப்பு கேட்கவேண்டியதில்லை.

திருமணத்திற்கு பின் இருவரும் எப்படி வாழ வேண்டும், எப்படி உண்மையாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.

கடந்த கால உண்மைகள் அனைத்தையும் சொல்லிவிட இயலாது என்பதை இருவரும் புரிந்திருக்க வேண்டும்.

என்றாவது ஒருநாள், நம்மைப் பற்றிய எதிர்மறை ரகசியம் யார் மூலமாகவோ துணைவருக்கு தெரியவந்தால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற பக்குவத்தையும் இருவரும் பெற்றிருக்க வேண்டும்.

பல மகிழ்ச்சியான தம்பதிகள்கூட இந்த இடத்தில்தான் தடம்மாறிவிடுகிறார்கள். கடந்த கால கசப்புகள் நிகழ்கால இன்பங்களை இல்லாமல் செய்து விடக் கூடாது.

கடந்த காலத்தைவிட வாழும் காலம்தான் முக்கியம் என்பதை நினைவில் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]