திருமணவிழாவில் 11 லட்சம் ஏமாற்றிய பிரபல நடிகை – வழக்கு தொடர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்!

தற்போது பல நடிகைகள் பட வாய்ப்புகள் குறைந்து விட்டதால் வேறு தொழில்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதில் பாலிவுட் நடிகை அமீஷா படேல் தற்போது திருமண விழாக்களில் நடனம் ஆடி வருகிறார். இதற்காக அவர் பல லட்சங்களை சம்பலமாக பெற்று வருகிறார்.

இவர் கடந்த 2016ம் ஆண்டு ஒரு திருமணத்தில் நடனம் ஆட ரூ. 11 லட்சம் வாங்கியுள்ளார், ஆனால் திடீரென்று திருமண திகதியில் ரூ. 2 லட்சம் அதிகமாக கேட்டுள்ளார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பணம் தர மறுத்ததால் திருமணத்தில் நடனம் ஆடாமல் சென்றுவிட்டார், ஆனால் அதற்காக வாங்கிய ரூ. 11 லட்சத்தை தரவில்லை.

இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பவன் சர்மா என்பவர் நடிகை மற்று 3 பேர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த பொலிஸார் அமீஷா உள்ளிட்ட 5 பேரை மார்ச் 12 திகதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]