திருமணம் செய்யாமலே கர்ப்பமான இலியானா!!! அதிர்ச்சியில் திரையுலகம்!!

தமிழ் படங்களின் வரத்து இல்லாததால் இந்தி படங்களில் கவனம் செலுத்தி நடிக்கும் இலியானா ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நிபோனை காதலிக்கிறார் என்பது ஊரறிந்ததே. இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பினர்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஆண்ட்ரூவை தனது கணவர் என இன்ஸ்டாகிராமில் இலியானா ஒரு தகவலை பதிவிட்டிருந்தார். இந்த விடயத்தால் இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்துவிட்டதாக கிசுகிசுக்கப்பட்டது.
இலியானா
இவர்கள் திருமணம் செய்து கொண்டதற்கான அதிகாரப்பூர்வ செய்தி இதுவரை வெளியாகவில்லை. இதை இலியானாவும், அவருடைய காதலரும் இன்னும் உறுதி செய்யவில்லை. இந்த நிலையில், இலியானா கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இலியானா குளியல் தொட்டியில் சிரித்தபடி படுத்திருக்கும் புகைப்படத்தை காதலனான ஆண்ட்ரூ இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இலியானா கர்ப்பமாக இருப்பது பற்றி இருவரும் உறுதி செய்யப்படாதநிலையில், இந்தி பட உலகில் இலியானா கர்ப்பமானதாக பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.