திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை பேஸ்புக் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை

கர்நாடகாவில் திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை பேஸ்புக் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மோகன் கவுடா (25) என்பவருக்கும் 22 வயதான இளம் பெண்ணுக்கும் இரண்டு மாதம் முன்னர் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் பேஸ்புக் நேரலையில் மோகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில், நாங்கள் ஐந்து ஆண்டுகளாக காதலித்தோம். அவள் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி இரண்டு மாதத்துக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டோம்.

ஆனால் திருமணத்துக்கு பின்னர் என் மனைவி என்னை ஏமாற்றிவிட்டாள். என் மனைவியும், மாமனாரும் தான் என் தற்கொலைக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

பொலிசார் இது குறித்து நடத்திய விசாரணையில், திருமணமான சில வாரங்களிலேயே மோகனின் மாமனாருக்கு உடல்நலம் சரியில்லை என போன் வந்துள்ளது.

இதையடுத்து தனது மனைவியை அவர் வீட்டுக்கு மோகன் அனுப்பியுள்ளார். ஆனால் பின்னர் மனைவி, மோகன் வீட்டுக்கே திரும்பவில்லை, இதையடுத்து 15 நாட்களுக்கு முன்னர் மோகன் தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததாக அவர் மனைவி பொலிசில் புகார் கொடுத்துள்ளது தெரியவந்தது.

இதனால் ஏற்பட்ட வருத்தத்தால் மோகன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து மோகன் மனைவி மற்றும் மாமனாரை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]