திருமணமான ஒரே மாதத்தில் புதுமண தம்பதியினருக்கு நடந்த விபரீதம்- தெலுங்கானா மாநிலத்தில் பெரும் சோகம்

தெலுங்கானா மாநிலத்தில் திருமணத்திற்கு பின்னரும் கணவர் தனது தோழியுடனான நட்பை தொடர்ந்த காரணத்தால் ஏற்பட்ட பிரச்சனையில் மனம் உடைந்து கணவர் தற்கொலை செய்துகொண்டார்.

எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வரும் சிவக்குமார் (வயது 27) என்பவருக்கு கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி லஹரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான புதிதில் இருந்தே சிவக்குமாருக்கும் அவரின் மனைவி லஹரிக்கும் இடையே சிறு சிறு விவகாரங்களால் பிரச்சனை ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே சிவக்குமார் அதே பகுதியைச் சேர்ந்த தனது தோழியான வென்னிலா என்பவருடன் நெருங்கிய நட்புடன் இருந்துள்ளார்.

சிவக்குமாரின் மொபைலில் வென்னிலாவுடனான வாட்ஸ் அப் உரையாடல்களை லஹரி பார்த்த பின்னர், அதனை கைவிடுமாறும் இது தொடர்பாக குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவிக்கப் போவதாக கடந்த 3 நாட்களாக மிரட்டியுள்ளார். இதனால் கடுமையாக மன உளைச்சளுக்கு ஆளான சிவக்குமார் தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதற்கிடையில், வென்னிலாவால் தான் சிவக்குமார் தற்கொலை செய்து கொண்டார் என அக்கம்பக்கத்தினர் அவரை தூற்றும் வகையில் பேசிவந்ததால் மனமுடைந்த வென்னிலா ஆசிட்டை குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

திருமணமான ஒன்றரை மாதத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]