திருமணமான ஆண், பெண் செய்யக் கூடாத 16 விஷயங்கள்!

நமது முன்னோர்கள் இந்த கிழமைகளில் இந்த விஷயங்கள் செய்யக் கூடாது, கோவிலுக்கு இந்த சூழலில் இருப்பவர்கள் போகக் கூடாது, ஆண்கள் இப்படி தான் விழுந்து கும்பிடக் கூடாது, பெண்கள் இப்படி தான் விழுந்து கும்பிடக் கூடாது என பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளது.

அதில், திருமணமான ஆண்கள், பெண்கள் என்னென்ன விஷயங்கள் எல்லாம் செய்ய கூடாது என முன்னோர்கள் கூறியுள்ளவை பற்றி இங்கே காணலாம்…

01

தாய், தந்தை உள்ளவர்கள், வெள்ளிக் கிழமைகளில் ஷேவிங் செய்யக் கூடாது.

02

இரண்டு கைகளை கன்னத்தில் வைத்தப்படி அமரவோ, நிற்கவோ கூடாது.

03

துவைக்காத உடைகளை கதவின் மேல் போடக்கூடாது.

04

உடலில் இருந்து ஷேவ் செய்த அல்லது உதிர்ந்த முடி, வெட்டிய நகம் வீட்டில் வைக்க கூடாது.

05

திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்வுகளுக்கு சென்று வந்த உடனேயே குளிக்க கூடாது.

06

சாப்பிடும் உணவை, உள்ளங்கையில் படும்படியோ அல்லது உருட்டியோ சாப்பிடக்கூடாது.

07

ஈரத்துணியை உடுத்தியபடியே சுற்றக் கூடாது.

08

மஞ்சள் கயிறில் மட்டுமே தாலியை அணிய வேண்டும்.

09

கோவிலில் விழுந்து வணங்கும் போது, அங்கப்ரதக்ஷிணம் செய்யும் போது மார்பு பூமியில் படும்படி வணங்க கூடாது.

10

கோவிலில் பிரசாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ள கூடாது.

11

பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்கவிட்டப்படி நடக்கக் கூடாது.

12
கடவுளை வணங்கும் போது பின்னங்கால் இரண்டையும் சேர்த்து மண்டியிட்டு, நெற்றி, பூமியில் படும்படி கும்பிட வேண்டும்.

13

தெற்கே பார்த்து நின்றபடி கோலம் இடக் கூடாது.

14

திருமணமான பெண்கள் காலில் ஒருவிரலில் மட்டுமே மெட்டி அணிதல் வேண்டும். ஒரே காலில் இரண்டு, மூன்று விரல்களில் மெட்டி அணிதல் கூடாது.

15

கர்ப்பமான பெண்கள் உக்கிரமான தெய்வங்களின் கோவில்களுக்கு செல்ல கூடாது.

16

அமாவசை மற்றும் தவசம் போன்ற நாட்களில் வீட்டு வாசலில் கோலமிடுவதை தவிர்த்தல் வேண்டும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]