திருமணமாகி 14 ஆண்டுகளாக கர்ப்பமாகாத மனைவி- கணவன் எடுத்த விபரீத முடிவு பின்னர் நடந்த விபரீதம்

டெல்லியில் திருமணமாகி 14 ஆண்டுகளாக மனைவி கர்ப்பமாகாத காரணத்தால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட கணவன், தனது வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த மனைவியை கொலை செய்துள்ளார்.

தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் விஜேந்திர குமார் என்பவருக்கும் சுனிதா என்ற பெண்ணுக்கும் 2003 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 14 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் சுனிதா கர்ப்பமாகவில்லை. இதற்காக மருத்துவம் மற்றும் பல சாமியார்களை சந்தித்தபோதும் பலன் கிடைக்கவில்லை. இதனால் தனது மனைவியிடம் விவாகரத்து கோரியுள்ளார் விஜேந்திர குமார்.

ஆனால், விவாகரத்து கொடுப்பதற்கு சுனிதா மறுத்துள்ளார். இதற்கிடையில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்த விஜேந்திர குமார், தனது முதல் மனைவியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இதனால் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இறப்பதற்கு ஒருவாரத்திற்கு முன்னர் தனது பெற்றோருக்கு போன் செய்த சுனிதா, தனது கணவரின் முதல் மனைவி தன்னை கொடுப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பெற்றோர் , விஜேந்திர குமாரிடம் விசாரித்தபோது அது ஒன்றும் பிரச்சனையில்லை, அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், சுனிதாவை அடித்துகொலை செய்துள்ளார் விஜேந்திர குமார்.

ஆனால், தனது மனைவி மாரடைப்பால் இறந்துவிட்டதாக அருகில் இருப்பவர்களை நம்பவைத்துள்ளார். ஆனால் சந்தேகம் அடைந்த அருகில் வசிப்பவர்கள் சுனிதாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, நடந்த சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது சுனிதாவின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, விஜேந்திர குமாரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]