சிரித்தால் கன்னத்தில் குழி விழும் நடிகை என கூறினால் நினைவுக்கு வரும் முதல் நடிகை லைலா.
12 வயதில் லண்டன் ஸ்கூல் ஆப் டான்சிங்கில் லண்டன் சென்று டான்சில் பட்டம் பெற்றவர். இதன் காரணமாக பலரது கவனத்தையும் ஈர்த்தவர்.
16 வயதிலேயே ஹீரோயினாக நடிக்க துவங்கிவிட்டார். 1996ஆம் ஆண்டு துஸ்மன் துணியா கா என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமானாலும் பெரும்பாலும் இவர் நடித்தது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் மட்டுமே.
தமிழில் 1999ஆம் ஆண்டு கள்ளழகர் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக அறிமுகமானார். அந்த படத்தில் அற்புதமாக நடித்த அவருக்கு பின்னர் தமிழில் வாய்ப்புகள் கொட்டத் துவங்கின.
திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை நிறுத்தியிருந்தார். இந்நிலையில் அண்மையில் இவர் எப்படி இருக்கின்றார் என்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் நகுலுடன் அவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
குறித்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]