திருப்பதியை சென்றடைந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடு செய்வதற்காக நேற்று திருமலையை சென்றடைந்தார்.

கொழும்பில் இருந்து சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை  பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அவரது மனைவி மைத்ரி விக்ரமசிங்க மற்றும் அதிகாரிகள் அங்கிருந்து சிறப்பு உலங்குவானூர்தி மூலம் நேற்று பிற்பகல் 4.35 மணியளவில் திருப்பதி விமான நிலையத்தை சென்றடைந்தார்.

அங்கு இலங்கை பிரதமரை ஆந்திர மாநில அமைச்சர் அமர்நாத் ரெட்டி, மற்றும் மாவட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர், அங்கிருந்து ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை திருமலைக்குப் புறப்பட்டுச் சென்றார். திருமலையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சிறி கிருஷ்ணா விருந்தினர் விடுதியில் அதிகாரிகள் வரவேற்றனர்.

நேற்றிரவு விடுதியில் தங்கியிருந்த ரணில் விக்ரமசிங்க இன்று காலை திருமலை ஏழுமலையானை தரிசித்து விட்டு, இன்று பிற்பகல் 1.15 மணியளவில் திருப்பதி விமான நிலையம் வழியாக திரும்பவுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் பயணத்தை முன்னிட்டு திருப்பதியில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]