திருப்பதியில் திருமணம் செய்யும் நமீதா

திருப்பதியில் திருமணம் செய்யும் நமீதா

நட்சத்திரங்களின் திருமணம் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் நடப்பதுதான் வழமை.

namitha

நடிகை நமீதா தனது காதலர், நடிகர், தயாரிப்பாளரான வீர் என்கிற வீரேந்திராவை வரும் 24ம் திகதி திருப்பதியில் திருமணம் செய்யவுள்ளதாக சமீபத்தில் அறிவித்தார்.

இதையடுத்து அவருக்கு ரசிகர்களும், சக நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நமீதாவின் திருமண அழைப்பிதழ் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

namitha

திருப்பதி யில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நவம்பர் 22ம் திகதி திருமண வரவேற்பு நடக்கிறது.

24ம் திகதி சித்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணர் ஆலயமான இஸ்கான் கோயிலில் காலை 5.30 மணிக்கு திருமணம் நடக்க உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

namitha

திருமணத்துக்கு பிறகு நமீதா நடிப்பாரா? இல்லையா? என்பதுபற்றி இதுவரை முடிவு செய்யவில்லையாம்.

ஆனாலும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட ஒன்றிரண்டு படங்களில் அவர் நடித்து முடிக்க முடிவு செய்திருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]