திருநங்கைகள் குறித்து சர்ச்சைக்குறிய டூவிட் : மன்னிப்பு கேட்ட கஸ்தூரி வீடியோ உள்ளே

திருநங்கைகளை இழிவுபடுத்தும் விதமாக சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்த திரைப்பட நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

18 எம்எல்ஏ தகுதி நீக்கம் வழக்கில் திரைப்பட நடிகை கஸ்தூரி திருநங்கைகளை இழிவுபடுத்தும் விதமாக சர்ச்சைக்குறிய கருத்தை தனது டுவிட்டர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். அவரது சமூக வலைதள கருத்துக்கு திருநங்கைகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் திராவிட விடுதலை கழகத்தினர் சார்பில் திருநங்கைகளை இழிவுபடுத்தும் விதமாக சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்த கஸ்தூரி மீது புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதில் ஒடுக்கபட்ட சமூக மக்களாக திருநங்கைகள் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களை இழிவு படுத்தும் விதமாக நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ளதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சினேகிதி என்ற திருநங்கை அமைப்பை சார்ந்த 30க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கஸ்தூரியின் ஆழ்வார்பேட்டை வீட்டுக்கு முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறை திருநங்கைகளை சமாதானப்படுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]