கார்த்திகேயன் பெருமையுடன் வழங்க மேக் 5 ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் தயாரிப்பில் விஜய் R. ஆனந்த், A.R.சூரியன் இருவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  விளையாட்டு ஆரம்பம்

இந்த படத்தில் யுவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ராவியா நடிக்கிறார் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

திருட்டு வி.சி.டி

விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர் பாலா, நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், அருண்பாண்டியன் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சாட்டை அன்பழகன், ஷக்தி N.சிதம்பரம், பிரவீன்காந்த், மன்சூர் அலிகான் தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ், பி.எல்.தேனப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருட்டு வி.சி.டி

விழாவில் நடிகரும் தயாரிபளார் சங்க தலைவருமான விஷால் பேசியதாவது..

எனக்கு கடுமையான காய்ச்சல் அடிக்கிறது. ஆனால் ஆஸ்பத்திரி போவதாக சொல்லிவிட்டு இந்த விழாவிற்கு வந்து விட்டேன்.

திருட்டு வி.சி.டி

பெரோஸ்கான் மகன் யுவன் ஹீரோவாக நடிக்கிறார். ஒரு அப்பாவிற்கு தன் மகன் பெரிய ஹீரோவாவது ரொம்ப பிடிக்கும் எங்க அப்பாவும் என்னை இப்படிதான் வளர்த்தார். அதனால் தான் இந்த விழாவிற்கு வந்தேன்.

திருட்டு வி.சி.டி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு முக்கிய முடிவு எடுத்திருக்கிறோம்..

தியேட்டரில் படம் ஓடும் போது அதை கேமரா வைத்து காப்பி செய்து திருட்டு வி.சி.டி, பைரஸி தயாரிக்க வேலை செய்பவர்களை கையும் களவுமாக பிடித்து தியேட்டர் நிர்வாகத்திடம் கொடுத்து போலீஸில் எப்.ஐ.ஆர் போட உதவுபவருக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ருபாய் ஒரு லட்சம் பரிசாக தரப்படும். இந்த நடவடிக்கையால் திருட்டு வி.சி.டி தயாரிப்பு கட்டுப்படுத்தப் படும் என்று கூறினார் விஷால்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]