திருட்டுக் குற்றச்சாட்டில் இளைஞன் நையப்புடைப்பு

ஹட்டன் குடாஒயா விநாயகர்புரம் பகுதியில் உள்ள இந்துமத ஆலய குருக்களின் வீட்டுக்குள் உட்புகுந்த திருடனை பிரதேச மக்கள் மடக்கி பிடித்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை வீட்டின் கூரையை பிரித்து இறங்கிய போது, வீட்டில் இருந்த குழந்தை அலறி சத்தமிட்டுள்ளது. இதனையடுத்து, அயலவர்கள் இணைந்து சந்தேக நபரை மடக்கிபிடித்துள்ளனர்.

அத்துடன், இளைஞனை நையப்புடைத்து தூண் ஒன்றில் கட்டிவைத்த மக்கள், பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

அங்கு விரைந்த பொலிஸார் ஹட்டன் குடாகம பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனை கைதுசெய்துள்ளனர்.
Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]