திருட்டில் ஈடுபட்ட 15 வயதுச் சிறுவன் கைது

திருட்டில் ஈடுபட்டதிருட்டில் ஈடுபட்ட 15 வயதுச் சிறுவன் கைது. அலவத்துகொட பிரதேசத்தில் ஒரு வீட்டில் இருந்து 15 வயதுச் சிறுவன் 75,000 ரூபாவை களவாடியுள்ளான். அச்சிறுவன் 75,000 பணத்தை வைத்து கையடக்கத் தொலைபேசிகள் சிலவற்றையும் அதற்கான உதிரிபாகங்களையும் வாங்கியுள்ளான். தகவல் அறிந்த போலீசார் அச்சிறுவனை கைது செய்து விசாரித்ததில் உண்மைகள் வெளிவந்துள்ளது.திருட்டில் ஈடுபட்ட

அவன் வசிக்கும் அப்பிரதேசத்திலேயே இச்சிறுவனுக்கு பழக்கமான வீடொன்றிலிருந்தே பணத்தை களவாடியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

போலீசார் அவனிடமிருந்து 30,000 ரூபா பணத்தையும், கையடக்கத்தொலைபேசி மற்றும் உதிரிப் பக்கங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் கைதுசெய்யப்பட்ட சிறுவனை, போலீசார் கண்டி நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தவுள்ளனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]