திருடர்கள் குறித்து பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல்

எதிர்வரும் தமிழ் -சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கொழும்புக்கு வரும் மக்கள், திருடர்கள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

கொழும்பு புறக்கோட்டை, மகரகம, நுகேகொடை உள்ளிட்ட கொழும்பை சுற்றியுள்ள பிரதேசங்களில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வரும் மக்கள் திருடர்கள் குறித்து அவதானமாக செயற்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது பாதுகாப்பு தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.