திருடர்களுடன் ரணில் பந்தியில் அமர்கின்றார்- அநுரகுமார

மைத்திரி, ரணில் தலைமையிலான அரசாங்கம் திருடர்களை பிடிப்பதாக கூறியே ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்று ரணில் விக்கிரமசிங்க திருடர்களுக்கு பாதுகாப்பாக மாறியுள்ளார்” என, ஜே.வி.பி.யின் தலை­வரும் நாடாளுமன்ற உறுப்­பி­ன­ரு­மான அநுரகுமார திஸா­நா­யக்க தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் ஜே.வி.பி ஏற்பாடு செய்யப்பட்ட பொது கூட்டம் கொட்டகலை டெரிக்கிளயார் தோட்டத்தில் இன்று நடைபெற்ற போது, அவர் இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

உள்ளுராட்சி மன்றங்களே ஊழலுக்கு எதிராக செயற்படுவதற்கான சிறந்த களம். இதனால் உள்ளுராட்சி மன்றங்கள் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

பிரதமரை போல ஜனாதிபதியும் மைத்திரிபால சிறிசேனவும் திருடர்களை பாதுகாக்கவே முயற்சிகின்றார். முன்பு மஹிந்த ராஜபக்ஷவும் திருடர்களை பிடிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்து பின்னர் அவரும் பொது சொத்துகளை துஷ்பிரயோகம் செய்தார்.

எல்லோரும் ஊழலை தடுப்பதாக கூறியே ஊழல் செய்கின்றனர். அமைச்சர்கள் பதவி பிரமாணம் செய்யும் போது ஊழலில் ஈடுப்படுவதில்லை என கூறியே சத்தியபிரமாணம் செய்கின்றனர்.

திருடர்களை பிடிப்பதாக கூறிய ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அனைவரும் திருடர்களோடு பந்தியில் அமர்கின்றனர்” என்றார்.
Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]