திருகோணமலையில் ஜப்பான் போர்க்கப்பல்

ஜப்பானியக் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.

ஜேஎம்எஸ்டிஎவ் செடோகிரி என்ற ஜப்பானியப் போர்க்கப்பலே, மூன்று நாட்கள் நல்லெண்ணப் பயணமாக திருகோணமலை துறைமுகத்துக்கு வந்தது.

திருகோணமலை துறைமுகத்தில் ஜப்பானிய போர்க்கப்பலுக்கு, இலங்கை கடற்படையினர் வரவேற்பு அளித்தனர். ஜப்பானிய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட அதிகாரிகளும் கப்பலை வரவேற்க வந்திருந்தனர்.

ஜப்பானிய கடற்படையின் 7 ஆவது கப்பல் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கொமாண்டர் தகேஷி ரொனேகாவா உள்ளிட்ட உயர் அதிகாரிகள்கடற்படையின் கிழக்கு பிராந்தியத் தளபதி உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

இந்தக் கப்பல் திருகோணமலைத் துறைமுகத்தை விட்டு நாளை புறப்பட்டுச் செல்லும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]