முகப்பு News Local News திருகோணமலை மாவட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட புற்று நோயாளர்கள்

திருகோணமலை மாவட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட புற்று நோயாளர்கள்

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த  வருடம் ஒக்டோபர் மாதம் முதல்  ஜூலை மாதம் வரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட புற்று நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுள் அதிகளவான நோயாளர்கள் தைரோயிட் என்றழைக்கப்படும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் சசிகலா பரமகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு புற்று நோய்  சிகிச்சைக்காக வரும் நோயாளர்களுக்கு எதுவித அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லையென நோயாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இதுகுறித்து எமது செய்தி பிரிவு, திருகோணமலை பொது வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் சசிகலா பரமகுலசிங்கத்திடம் வினவியபோது, நோயாளர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com