திருகோணமலை மாணவர்கள் படுகொலைக்கு நீதி கோருகிறது மன்னிப்பு சபை

திருகோணமலை மாணவர்கள் “2006ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதியன்று திருகோணமலை கடற்கரையில் வைத்து கொலைசெய்யப்பட்ட ஐந்து மாணவர்கள் தொடர்பில் நீதி வேண்டும்” என்று, சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச மன்னிப்பு சபையின் டுவிட்டர் வலைத்தளத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2006ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதியன்று திருகோணமலை கடற்கரையில் வைத்து மேற்கொள்ளப்பட்ட குறித்த மாணவர்களின் கொலைகள் தொடர்பில், விசேட அதிரடிப்படையினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும், எவரும் இதுவரை சட்டத்துக்கு முன் நிறுத்தப்படவில்லை.

மனோகரன் ரகிவர், யோகராஜ் ஹேமசந்திரன், லோகிதராஜா ரொஹான், தங்கவேல் சிவாநந்தா மற்றும் சண்முகராஜா கஜேந்திரன் ஆகியோரே கொல்லப்பட்டிருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]