திருகோணமலை பொண்ட் இன்டர்நேஷனல் பாடசாலையின் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள்

திருகோணமலை

திருகோணமலை மண்ணில் கடற்கரைக்கு அருகில் காணப்படும்            (Bond international school) பொண்ட் இன்டர்நேஷனல் பாடசாலையின் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் இன்று (2-2-18) ஏகாம்பரம் மைதானத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வுகளை அப்பள்ளியின் தலைமை நிர்வாகியான ரொபின்சன் நடாத்தினர். இன்று பகல் 2:30 மணியளவில் கோடி ஏற்றுதலுடன் ஆரம்பித்து சிறார்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன.

இவ்விளையாட்டுப் போட்டிக்கு பிரதம விருந்தினராக திருகோணமலை பீஸுப் (Bishop) அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

குழந்தைகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கும், மனதை ஆறுதல்படுத்துவதற்கும் இந்த விளையாட்டு போட்டிகள் முக்கிய பங்காற்றுகின்றன. குழந்தைகளை பயிற்றுவிப்பதில் ஆசிரியர்கள் பங்கு பெரிதும் காணப்படுகின்றது. இந்த விளையாட்டு போட்டியை காண பலர் வருகை தந்திருந்தனர்.

இந்த குழந்தைகளின் விளையாட்டு போட்டிக்கு உதவுவதற்கு திருகோணமலை/இ.கி.ச.ஸ்ரீ.கோணேஸ்வரா இந்து கல்லூரி (T /R.K.M.SRI KONESHWARA HINDU COLLEGE ) சாரணிய மாணவர்களும், கொன்வெண்ட் என அழைக்கப்படும் சென் மேரிஸ் பெண்கள் பாடசாலையின் சென்ஜோன்ஸ் படை அணி மாணவர்களும் வந்து உதவி செய்தனர். சாரணர்கள் இது போன்று பல சேவைகளை செய்துவருகின்றனர்.

எல்லா போட்டிகளும் முடிவடைந்த பின் மாறு வேட போட்டி இடம்பெற்று கொடியிறக்கத்துடன் எல்லா நிகழ்வுகளும் முடிவடைந்தன. இவற்றின் மூலம் குழந்தைகளின் ஆக்கத்திறன்,பௌதீக திறன் மற்றும் ஒற்றுமை வளர்க்கப்படுகின்றன என்பது மிகையாகாது.

திருகோணமலை திருகோணமலை திருகோணமலை திருகோணமலை திருகோணமலை திருகோணமலை திருகோணமலை திருகோணமலை திருகோணமலை திருகோணமலை திருகோணமலை திருகோணமலை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]